Monday, 26 December 2011

Rajarajeswari

ராகம்: சுத்த தன்யாசி  தாளம்:ஆதி



                                                   பல்லவி
மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பரிபாலயமாம்
ப்ரணவ  ஸ்வரூபிணீம் ஸ்ரீ (மாதா)
 
                                        அனுபல்லவி
ஸதா ஸ்மராமி வாணி ரமா ஸேவிதே
ஸ்ரீமத்  ஸிம்ஹா ஸநேச்வரி  அம்ப (மாதா)

                                                 சரணம்
பரமேஸ்வர ஸஹிதே லலிதே பாலயமாம்
ஸ தா   ஆனந்த ஸ்வரூபிணீம் சௌபாக்ய தாயிநீம்
சரதிந்து முக கமலே மந்த ஹாஸ வதனே
சதுர் வேத சாஸ்த்ராதி ஸேவிதே ஞான மயே
                                        அனுபல்லவி(போல)
ஸகலலோக ஜனனீம் சித்ரூபிணீம் தேவீம்
தீனவத்ஸலே ஹே! த்ரிபுரசுந்தரி (மாதா)    
   
        

Murugan Pattu

ராகம்: சக்கரவாகம் தாளம்: ஆதி

                              பல்லவி   


நினைந்து நினைந்து நாளும் தொழுதேன்  கந்தா
தென் பழனி மேவும் முருகா மால்மருகா-உனை(நினைந்து)

                              அனுபல்லவி
கனிந்த என் மனம் உனை காணவே   ஏங்குதே
பரமனின் மகனே பக்த வத்ஸலனே வாராய் (நினைந்து)

                                 சரணம்
தேவ ஸேநாபதே பரம்குன்ற திருமுருகா
வள்ளி மணவாளா திருத்தணிகை வேலா
ஆலவாய் அழகா சூரசம்ஹாரா குஹா
                              (அனுபல்லவி போல்)
சுவாமிமலை மேவும் சுவாமிநாத குருவே
பழமுதிர் சோலையில் ஞான பழமான தேவா(நினைந்து)

                              சிட்டஸ்வரம்(optional )
நித பம கமபம கமகரிஸா - நிஸா
மகா பமா நிதா தநி ஸ ரிஸா கம கரிஸநி
த நி ஸ ரி ஸாஸா நிதநீ ,தபநிதபமப
தநீபதா மபா மகபம கரி கம
பதநி தநி ஸா ஸநித நிதபம (நினைந்து)    
    
                         
                                     

Sunday, 25 December 2011

SARADAMBAL

RAGAM: ஸிந்துபைரவி     , தாளம்: ஆதி

                                        பல்லவி
ச்ருங்ககிரி ஸ்திதே சுந்தரி பாரதி
சங்கர தேசிக ஸ்தாபிதே    (ஸ்ரீ)சாராதே


                                     அனுபல்லவி
துங்கா தடா தீர நிவாசிநீம் மாநிநீம்
வாரிஜ லோசநீம் மஞ்சுள பாஷிணீம்  (ச்ரிங்க)

                                       சரணம்
ரமணீய வனவாசிநீம் சாரதே
கமனீய வதநாம்புஜே வரதே
சுத்தஸ்படிக ரூபாய வித்யாதரே
மனஸ் வினி தபஸ்வினி மோகினி சுகபாணீம்     
பக்தவத்சலே தேவி பரமபாவனி அம்ப
கந்தர்வாதி கானப்ரியேசங்கீத மாத்ருகே (ச்ரிங்க)                                

     
    
  

Mahalakshmi

ராகம் : அமிர்தவர்ஷிணி    தளம் : ஆதி

                                       பல்லவி
க்ஷீரசாகர தனயே ஸ தயே ஸ்ரீ மஹா லக்ஷ்மி தேவி ஸததம்   ஸ்மராமி

                                  அனுபல்லவி
பரிபாலிதே ஆஸ்ருத வத்ஸலே  
ஸுர நர வந்திதே ஸரசி ஜ லோசனே   (க்ஷீர)

                                       சரணம்
முராரி மனோல்லாஸிநீம் காமினீம்
சரதிந்து முக விலாஸி நீம் சுந்தரீம்
பதித பாவநீம் பரசுக தாயிநீம்
மந்திர ஸ்வரூபிணீம் மங்கள  தாயிநீம்

                                      அனுபல்லவி(போல)
பங்கஜ வாஸிநீம் பவபய ஹாரிணீம்
மஞ்சு பாஷிணீம் ஹே! அமிர்தவர்ஷிணீம்


    


                        
 
     
     
    
                 

Friday, 23 December 2011

Raman

ராகம் : ஜகன்மோஹினி.  தளம்:ஆதி

                                                     பல்லவி
தயாநிதே ஜகத்பதே சீதாபதே
ரகுபதே குணநிதே (தயா) 

                                                    அனுபல்லவி
மாயா ம்ருகஹர    ரகு நந்தன
சீதா மனோஹர தாசரதே மாம்பாஹி  (தயா)

                                                சரணம்
ரவிகுல திலகா  ஸாகேத ராமா
தீன வத்சல   சபரீ மோக்ஷ காரணா
பதித பாவனா பாபவிமோசனா
ஹனுமத் ப்ரிய கமலேக்ஷ்ண    
கர தூஷண ராவணாதி சம்ஹாரா  
த்யாயாமி மனஸா
ஜகன் மோகனாங்கார.(தயா)     


     
                                      

       

Thursday, 22 December 2011

Sangeetham-a tribute

ராகம் : கல்யாணி  தாளம் :  ஆதி

த்யானம்
    
ஸகலகலா வாணி கல்யாணி
வீணா புஸ்தகபாணி  பன்னகவேணி
ஸ்வேத பத்மாஸநே ஹம்ஸ வாஹினி
மனோன்மணி மஹாசரஸ்வதி தேவி
சரணம் சரணம்   சரணம்

பபா பமகாரி ரிகமபா
பகவதி  பாரதி கீர்வாணி
ஸா  ஸநிதப பதபம கரிஸா
பன்னகவேணி  பாலயமாம்


                                பல்லவி
சங்கீதமே சௌக்யானுபவமே
ஆனந்தமே பரமானந்தமே (சங்கீ)
                               
                          அனுபல்லவி
நாதானு சந்தான ராக ப்ரவாஹமே
ஸ்வர ராக லயாதி சஞ்சாரமே  (சங்கீ)

                               சரணம்
ஷட்ஜமும் ரிஷபமும் காந்தரமும்
மத்யமம் பஞ்சமம் தைவதமும்
நிஷாதம் சப்த ஸ்வர ராகமே
ஸ்ருதி லய ராகமே சுகானுபவமே (சங்கீ)
          

        

      
               


   
    

      

Wednesday, 21 December 2011

GANAPATHI PATTU

ராகம்: நாட்டை தாளம்:  ஆதி                   

                         பல்லவி
கஜ முகனே  ஸ்ரீ  கணநாயகனே 
காத்திடுவாய்  இடர் நீக்கிடுவாய்     (கஜ)

                 அனுபல்லவி
ஜகத்தினில் என்னை சுடர் ஒளியாக
திகழ்திடவே அருள் புரிந்திடுவாய் (கஜ)

                   சரணம்
சந்ததமும் உன் புகழ் பாடி மகிழ்வேனே
பந்தமும் மோஹமும் விலகிடவே(நெஞ்சில்)
மகிமைகள் மிஹுந்த மலை மகள் மகனே(என்)
அகத்தினில்  என்றும் நிலைதிடுவாய்
ஸாப மாப நிப மப நிநிஸா
காஸா ஸா நி ப நிஸா நி பபம
ககம கமா காஸா நீப மகஸா
ஸா நி ப மபநி ப ஸாநி பமகம